
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சிவகாசி உள்ளிட்ட பல இடங்களில் கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மலை பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.