தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நிவாரணம் குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய், சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு பத்தாயிரம் ரூபாய், 33 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹேக்டருக்கு 17,000 ரூபாய், மானாவாரி பயிர் 8000 ரூபாய், பசு மற்றும் எருது உயிரிழப்புக்கு 37ஆயிரத்து 500 ரூபாய், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு உயிரிழப்புக்கு நான்காயிரம் ரூபாய், முழுவதும் சேதமடைந்த கட்டுமானத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.