
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதேசமயம் பங்கு கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை காரணமாக மூன்று தென் மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை, தென்காசி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், கோவை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.