இஸ்ரேல் நாடு காசா மீது கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 39,175 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 90,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தப் போர் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் அதிபர் நெதகுன்யா நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

இதனால் அவருடைய வருகையை கண்டித்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வாஷிங்டன் யூனியன் கட்டிடத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நெதகுன்யா வரும் பாதையிலும் போராட்டம் நடத்தினர். அவர்களை கடுமையான ஒடுக்குமுறை மூலம் போலீசார் கட்டுப்படுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் அமெரிக்க நாட்டின் தேசியக்கொடியை ‌ எரித்தனர். அதோடு நெதகுன்யாவின் உருவ பொம்மைகளையும் எரித்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேசிய கொடியை எரித்து போராட்டம் நடத்தியது அமெரிக்க நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு கமலா ஹாரிஸ்  உட்பட பல தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.