
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 23ஆம் தேதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நேற்று இரவு முதல் விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, நாகப்பட்டினம், திருவாரூர், விருதுநகர் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் இனிவரும் நாட்களுக்கும் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய புயல் சின்னம் உருவாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு வருகிற 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.