
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தற்போது கள ஆய்வை மேற்கொள்ள இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் திமுக நிர்வாகிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் திறனை பாராட்டும் வகையில் நாமக்கல் மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து உள்ளம் நெகிழ்ந்தேன். நம்முடைய அரசாங்கம் நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்த நிலையை தெரிந்து கொள்வதற்காக மாவட்டங்கள் தோறும் கள ஆய்வை மேற்கொள்ள இருக்கிறேன்.
எதிர்கால முதல் கட்டமாக நவம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் கோவையில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். கள ஆய்வுகள் நிறைவு பெற்றதும் கழகப் பணிகளை மேற்கொள்வேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் திமுக அரசு மீது எதிர் கட்சிகள் அடிப்படை இல்லாத அவதூறுகளை பரப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இனி நேரடியாக கள ஆயுள் மேற்கொள்ள இருக்கிறேன் என்று தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நமது #DravidianModel-இன் திறனைப் பாராட்டும் விதமாக நாமக்கல் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் உள்ளம் நெகிழ்ந்தேன்!
நமது அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் நிலை குறித்த மாவட்ட வாரியான கள ஆய்வை நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் இருந்து தொடங்குகிறேன்.
கள ஆய்வுகள் நிறைவுற்றதும் கழகப்… pic.twitter.com/mTVg0s1mjA
— M.K.Stalin (@mkstalin) October 25, 2024