
தமிழக முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பவள விழாவின்போது அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவித்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் மற்றும் கா. ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் புதிதாக கோவி செழியன், நாசர் மற்றும் ஆர். ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு செந்தில் பாலாஜிக்கும் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் அவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகிற அக்டோபர் 8-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டம் இது. இதன் காரணமாக அந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் புதிய அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய முடிவுகளையும் அதிரடி அறிவிப்புகளையும் வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.