
எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி இருப்பதாக மறைந்த ஜெயலலிதாவின் மகள் என பகீர் கிளப்பும் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். டெல்லியில் தனது கட்சியை பதிவு செய்ய வந்த அவர், இரட்டை இலை சின்னத்திற்கும் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கும் உரிமை கோர இருக்கிறேன். ஜெயலலிதாவின் மகள் என நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனைக்கு தயாராக உள்ளேன். மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளேன் என அவர் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.