
மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியை சேர்ந்தவர் சித்தாந்த் மாஸல். பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த சித்தாந்த் சம்பவத்தன்று தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். தேர்வரையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த சித்தாந்த் திடீரென தனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுவதாக அறையில் இருந்த ஆசிரியரிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சித்தாந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்தாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மாரடைப்பு ஏற்பட்டு தான் சித்தாந்த் இறந்ததாகவும் கூறியுள்ளனர். இதற்கு முன்பு சித்தாந்திற்கு எந்த ஒரு உடல்நல பாதிப்புகளும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.