
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு நடைபெறும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஒரு சிவில், ஒரு போலீஸ் அதிகாரியை கண்காணிப்பாளராக நியமிக்க மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர், டிஜிபிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தேர்வு முறையின் நேர்மை தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மாநில அரசுகளின் உதவியை மத்திய அரசு நாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.