
சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றார். இங்கு வைத்து திவ்யதர்ஷினி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் தேர்வு பயம் மற்றும் மதிப்பெண் குறைந்துவிடும் என்று அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.