சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் டிடி. விஜய் டிவியின் தொகுப்பாளராக இருந்து பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கினார். குறிப்பாக காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் தொழிலதிபர் ஒருவருடன் இரண்டாம் திருமணம் நடைபெற உள்ளதாக அடிக்கடி செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இவர் வீல்சேரில் கையில் ஸ்டிக்குடன் வந்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இது குறித்து பேசி உள்ள டிடி, நாம் ஆரோக்கியமாகவும் நம்மால் ஒரு காரியம் ஆகிறது என்றால் தான் நம்மை ஒரு இடத்தில் வைத்திருப்பார்கள். நம்மால் முடியவில்லை என்றால் அங்கிருந்து தூக்கி வீசப்படுவோம் என்பதை என்னுடைய வாழ்க்கையில் நான் தாமதமாக கற்றுக் கொண்டேன் என கூறிவிட்டார். அதனைப் போலவே டிடியின் அக்கா பிரியதர்ஷினி, டிடிகே தொழிலதிபர் ஒருவருடன் இரண்டாம் திருமணம் என செய்திகள் வருகின்றன. நாங்களும் அதை தான் கேட்கிறோம். ஏதோ ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என வதந்திகள் வரும். யாருப்பா அவரு எங்களுக்கே பார்க்கணும் போல இருக்கே என்று தோன்றும். எத்தனை பேருக்கு தான் நாங்கள் பதில் சொல்வது. போகப் போக இது எங்களுக்கு பழகி பழகி சிரிப்புதான் வருகிறது என தெரிவித்துள்ளார்