காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி. இவர் கடந்த 26 ஆம் தேதி சுல்தான்பூருக்கு சென்றிருந்தார். அப்போது சாலையோரத்தில் ஒரு தொழிலாளி செருப்பு தைக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் ஏழ்மை நிலையை பார்த்த ராகுல் காந்தி அவரிடம் சென்று பேசினார்.

அப்போது அந்த தொழிலாளி தான் 40 ஆண்டுகளாக செருப்பு தைத்து வருவதாக கூறினார். மேலும் அவர் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும் வேதனைகளையும் ராகுல் காந்தியிடம் கூறினார். இதனைக் கேட்ட ராகுல் காந்தி அந்த தொழிலாளிக்கு உதவ எண்ணினார்.

அதன்படி அவருக்கு புதிதாக தையல் மெஷின் ஒன்றை பரிசாக வழங்கினார். இதனை கண்ட அந்த தொழிலாளியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மகிழ்ச்சியில் “இனி கைகளில் செருப்புகளை தைக்க தேவை இல்லை” என்று கூறினார். மேலும் அந்த தொழிலாளி, தனக்கு செய்த உதவிக்காக ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்தார்.