தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை ஒழித்து விடுவேன் என அதிகாரத் திமிரில் ஆட வேண்டாம் என அண்ணாமலைக்கு சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், தம்பி அண்ணாமலை நீ எடுத்திருப்பது வெறும் போலீஸ் ட்ரைனிங், நான் எடுத்திருக்கிறது போராளி டிரெய்னிங், தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோத முடியுமா? தமிழகத்திற்கு பாஜக ஏன் தேவைப்படுகிறது என்பதை விவாதிக்க தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.