சமந்தா, பகத் பாசில் மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்ட திரை பிரபலங்கள் தங்களுக்கு உள்ள நோயை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகை அனுஷ்காவும் இணைந்துள்ளார்.கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்தவர் தான் அனுஷ்கா ஷெட்டி. இவரின் ஒரிஜினல் பெயர் ஸ்வீட்டி ஷெட்டி, பின்னர் சினிமாவுக்கு வந்த பின்னர் தன்னுடைய பெயரை அனுஷ்கா ஷெட்டி என மாற்றிக்கொண்டார். பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பிஸியாக இருந்து வருகின்றார்

இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஸ்மைலிங் சிண்ட்ரோம் என்ற அரிய வகையான சிரிக்கும் வியாதி தனக்கு இருப்பதாக கூறிய அவர், தான் சிரிக்க ஆரம்பித்தால் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பேன் என தெரிவித்துள்ளார்.