
திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியில் சாதிக் பாட்ஷா (51) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அந்த சிறுமி தனியாக இருந்த நேரத்தில் சாதிக் பாட்ஷா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதோடு மாணவியிடம் தொலைபேசி நம்பரை கேட்டதோடு தன்னிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தன் பெற்றோரிடம் நடந்த விஷயங்களை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சாதிக் பாட்ஷாவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.