
தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொல்லியல், அருங்காட்சியகவியில் நிறுவனத்தில் வழங்கப்படும் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் உள்ளிட்ட இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ஜூலை 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் ஜூலை 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் சேர்க்கை பெரும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் பயிலுதவித்தொகை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கல்விச்சாற்றுதல்கள் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து முதன்மை செயலர் மற்றும் ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600008 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.