திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வண்ணத்துறை கிராமம் ஜெயலட்சுமி நகர் பகுதியில் பழனிச்சாமி- சின்னத்தாய்(58) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் சின்னத்தாய் சாப்பாட்டில் விஷம் கலந்து வீட்டு முன்பு வைத்தார். அந்த உணவை எலிகள் சாப்பிடவில்லை.

மாறாக அப்பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் விஷம் கலந்த உணவை சாப்பிட்டது. இதனால் 7 தெரு நாய்கள் மூன்று கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை பராமரிப்பு துறையினர் உயிரிழந்த நாய் மற்றும் கோழிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.