
தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை அஞ்சலி. இவர் தனது திருமணம் குறித்த வதந்திகளுக்கு தற்போது பதில் அளித்துள்ளார். தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாக ஒரு செய்தி வெளியாகிய நிலையில் அந்த செய்தியை இவர் நிராகரித்துள்ளார்.
தொடர்பாக பேசிய அஞ்சலி, எனக்கு இண்டஸ்ட்ரியில் நிறைய நண்பர்கள் உள்ளனர் . நீங்கள் யாரை சந்தித்தாலும் இணைப்புகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஒரு முறை ஹீரோ ஜெயுடன் தனக்கு தொடர்பு இருந்ததாக கூறினர். தற்போது அவர் ஒரு தொழிலதிபரை மணக்கிறார். எனக்கு யாருடனும் தொடர்பு இல்லை. திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தால் சொல்கிறேன் என்று அஞ்சலி வெளிப்படையாக பேசியுள்ளார்.