மயிலாடுதுறை மாவட்டம் குத்தலம் பகுதியில் அசைவ உணவகம் ஒன்றில் நேற்று இரவு இளைஞர்கள் சிலர் தோசை சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் எண்ணெய் ஊற்றாமல் தோசை கொண்டு வரும்படி ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு பரிமாறப்பட்ட தோசையில் எண்ணெய் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் கடை உரிமையாளரை கொடூரமாக தாக்கினர். இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ராஜராஜன் மற்றும் திவாகர் உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.