நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் சிஎஸ்கே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக 4 போட்டிகளில் தொடர்ச்சியாக சிஎஸ்கே தோல்வியை சந்தித்துள்ளதால் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதோடு தோனியையும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். ஐபிஎல் தொடரிலிருந்து தோனி முழுமையாக ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கடமையாக விமர்சித்து வரும் நிலையில் இது பற்றி தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் கூறியதாவது, ஒரு வீரரை புள்ளிவிவரங்களை வைத்து விமர்சிக்க அனைத்து ரசிகர்களுக்கும் உரிமை உண்டு.

ஆனால் அதற்காக தோனியை அவமானப்படுத்தக் கூடாது. தோனி சிறப்பாக செயல்படாமல் போனதற்காக அவரை விமர்சியுங்கள். ஆனால் இந்தியாவுக்காக பல உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த தோனியை அவமானப்படுத்தாதீர்கள். அவருடைய தலைமையில் இந்தியா எத்தனை கோப்பைகளை வென்றுள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். எம் எஸ் தோனி ஒரு மிகப்பெரிய வீரர். அவர் ஒரு சாம்பியன். நான் சமூக வலைதளங்களில் பார்க்கும் மீம்ஸ்கள் தயவுசெய்து அது மட்டும் வேண்டாம். நாங்களும் விமர்சிப்போம் ஆனால் அதனை மரியாதையுடன் செய்யுங்கள். ரசிகர்கள் மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.