
சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்த பிறகு ரசிகர்களை மைதானத்திலேயே காத்திருக்கச்சொல்லி சிஎஸ்கே நிர்வாகம் கூறியிருந்தது. இதனையடுத்து தோனி ஓய்வை அறிவிக்கப்போகிறாரா என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்திருந்தனர்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகமோ, தோனியோ அது போன்ற அறிவிப்பை வெளியிடவில்லை. மாறாக போட்டி முடிந்த பின் தோனி மற்றும் பிற சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி கூறினார்கள். அத்துடன் தோனி ஒரு பை நிறைய டென்னிஸ் பந்துகளை எடுத்து வந்து ரசிகர்களை நோக்கி வீசினார்.