
கிரிக்கெட் அரங்கை அலங்கரித்த சிறந்த வீரர்களில் முக்கியமானவர்தான் கேப்டன் கூல் என்று அனைவராலும் புகழப்படும் தல தோனி. ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். இன்றும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்த நிலையில் தோனி ஜூலை 7 நாளை தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 100 அடி உயரத்தில் கட் அவுட் வைத்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தோனி பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.