
பாடகி சின்மயின் தாயார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வைரமுத்து சின்மயியை போனில் அழைத்து உன் பெயரில் தேசிய விருதுக்கு பரிந்துரைக்க போகிறோம் உடனே வா என்று அழைத்தார். இதனால் நானும் சின்மயியும் அவருடைய இடத்திற்கு சென்றோம். நான் காரை விட்டு வருவதற்குள் சின்மயி அவரை பார்க்க சென்று விட்டார். நான் படிக்கட்டுகளில் ஏறி மேலே செல்வதற்குள் சின்மஇ தலை கலைந்து ஒரு செருப்போடு கீழே வந்தார். எனக்கு அங்கே ஏதோ தவறாக நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்டு அவரை அந்த இடத்திலேயே என்ன நடந்தது என்று கேட்காமல் காரில் அழைத்து வீட்டுக்கு வந்து விட்டேன்.
நாங்கள் அப்போது மானம், கௌரவத்திற்கு அஞ்சி அந்த விஷயத்தை மறைத்து வைத்திருந்தோம். வைரமுத்து சின்மயி தோளின் மீது கை போட்டார், நெற்றியில் முத்தம் கொடுத்தார். அதை அவள் வீட்டுக்கு வந்த பிறகு என்னிடம் சொன்னார். உடனே நான் அவரிடம் சரி இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று கூறினேன்.
ஒருவேளை நான் வைரமுத்துவிடும் கேட்டிருந்தால் கூட அவர் அன்பாக முத்தமிட்டேன் என்று கூட சொல்லி இருப்பார். ஆனால் சின்மயிக்கு தான் தெரியும். மீ டு என்ற ஒரு மூவ்மெண்ட் வரும் பொழுது அது குறித்து வெளியே சொன்னாள். அப்போதுகூட நான் சின்மயிடம் காலில் விழுந்து கேட்டேன் தயவு செய்து இந்த விஷயத்தை வெளியே சொல்லாதே என்றேன். ஆனால் அவள் அதையும் மீறி சொன்னாள். ஆனால் நான்கு வருடங்களில் சிம்மயி எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை நல்ல காரியம் தான் என்று எனக்கு புரிந்து விட்டது.