
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்துக் கொண்டு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் சிட்லபாக்கம் பகுதியில் தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். அதன் பிறகு உதயகுமாரை ஓட ஓட விரட்டி கொடூரமான முறையில் வெட்டினர்.
இதில் பலத்த காயமடைந்த உதயகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சிட்லபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது 2 மாணவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் 6 மாதத்திற்கு முன்பாக உதயகுமார் சாலையில் ஆட்டோவை நிறுத்தி தகராறு செய்ததால் முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்ததாக கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.