
சென்னையில் புத்தாண்டு பிறந்த போது தங்கம் விலை உயர்ந்தது. இதைத்தொடர்ந்து மறுநாளும் தங்கம் விலை உயர்ந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று தங்கத்தின் விலை சரிவடைந்து ஒரு சவரன் 57,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 57 ஆயிரத்து 720 ரூபாயாகவும், ஒரு கிராம் 7215 ரூபாய் ஆகவும் இருக்கிறது. அதன்பிறகு 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் 7871 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 62968 ரூபாய் ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 99 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 99 ஆயிரம் ரூபாய் ஆகவும் இருக்கிறது.