
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பகுதியில் உத்திராடம் (56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தம்பி சங்கர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை உத்திராடம் ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். அப்போது சங்கரின் மகன் சுபாஷ் (21) அவரை பின்தொடர்ந்து சென்றார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை கொடூரமாக தலையில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.