தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருக்கும் ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர்களுடைய திருமணம் சமூக வலைதளங்களில் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சமீபத்தில் பண மோசடி வழக்கில் ரவீந்தர் சிறைக்கு சென்று வந்தார். இவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சமூக வலைதளங்களில் எதையும் பதிவிடாமல் இருந்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது ரவிந்தர் ஒரு இன்ஸ்டா பதிவை போட்டுள்ளார். அதில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தில் அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தில் நடிப்பதாக தற்போது அவர்  பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.