தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது‌. அதாவது கலைத்துறையில் சிறந்த சேவை ஆட்சியதற்காக அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்ற நிலையில் குடியரசு தலைவர் இடமிருந்து நடிகர் அஜித் பத்மபூஷன் விருதினை பெற்றுக்கொண்டார். மேலும் இதே போன்று கிரிக்கெட் வீரர் அஸ்வினும் பத்மஸ்ரீ விருதினை பெற்றுக்கொண்டார்.