
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் இன்று தன்னுடைய 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பிறந்த நாளில் தன் கணவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார். அதன்படி சுமார் ரூ.23 லட்சம் மதிப்பிலான Ducati Multistrada V4 என்ற பைக்கை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
