
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் புதிய அப்டேட்டை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த படத்தின் ஷூட்டிங் வருகின்ற மே 10-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.