
முன்னணி நாடக நடிகரும் 25க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த வருமான கோபிநாத் ராவ் சென்னையில் இன்று காலமானார். 71 வயதாகும் இவர் கிரேசி மோகன் நாடக நிறுவனத்தில் நடித்து வந்தார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரது குட்டி, பவுனு பவுனுதான் படத்தில் ஐஸ்ஃப்ரூட் ஐயர் என்று பல முக்கிய வேடங்களில் இவர் நடித்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.