
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சல்மான் கான். இவருக்கு கடந்த 1998ஆம் ஆண்டு முதலில் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானை கொல்ல தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். சல்மான் கான் மீது கொலை முயற்சி தாக்குதல்களும் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் நடிகர் சல்மான் கானுக்கு நெருக்கமாக இருந்ததற்காக பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டார். அதாவது சல்மான் கானுக்கு நெருக்கமாக இருந்ததால் தான் அவரை கொலை செய்ததாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கூறியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் சல்மான் கானை கொலை செய்யும் முயற்சி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என சுகா என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்ற பத்திரிக்கையில் பல அதிர்ச்சி மற்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது நடிகர் சல்மான்கானின் பண்ணை வீட்டில் வைத்தே அவரை கொலை செய்ய 25 லட்சம் வரை டீல் பேசப்பட்டுள்ளது. இந்த காண்ட்ராக்டை சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் எடுத்துள்ளது. இந்த கொலை வழக்கில் 5 பேர் தொடர்புடையவர்கள். இதில் சுகா பாகிஸ்தானில் இருந்து சட்ட விரோதமாக ஏகே-47 உள்ளிட்ட துப்பாக்கிகளை வாங்கியுள்ளார்.
அதோடு இவர் தான் சல்மான் கான் கொலை செய்யவும் 5 பேரை நியமித்துள்ளார். இவர்கள் சல்மான்கான் கொலை செய்த பிறகும் முதலில் கன்னியாகுமரிக்கு தப்பி சென்று விட்டு அங்கிருந்து இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்பது குற்றப் பத்திரிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு நடிகர் சல்மான் கானின் வீடு மற்றும் படப்பிடிப்பு போன்ற இடங்களில் அவரை கண்காணிக்க கிட்டத்தட்ட 60 முதல் 70 பேரை களம் இறக்கி உள்ளதாகவும், மேலும் அவர் மீதான கொலை வழக்குகள் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி காவல் நிலையத்தில் பதிவானதாகவும் போலீஸ் குற்ற பத்திரிக்கையில் தெரியவந்துள்ளது.