தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருப்பவர் சூரி. இவர் கடந்த 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா காமெடியால் பிரபலமானார். இதனால் இவரை ரசிகர்கள் பரோட்டா சூரி என அழைக்கின்றனர். காமெடி கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது முன்னணி மற்றும் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ், நடிகர் சூரியை வைத்து கொட்டுக்காளி என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ளது. சர்வேத அங்கீகாரம் பெற்ற கொட்டுகாளி படத்தின் டீசர்  வீடியோ தற்போது  வெளியாகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.