தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜெயம் ரவி. அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததலின் மூலம் தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆர்த்தி என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். சமீபகாலமாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி பிரிந்து விட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவிய நிலையில் இன்று ஜெயம் ரவி தன் மனைவியை விவாகரத்து செய்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நீண்டகால பரிசீலனைகள் மற்றும் யோசனைகளுக்கு பிறகு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் அனைவரும் இந்த முடிவுக்கு மதிப்பு கொடுத்து தனிப்பட்ட விஷயங்கள் பற்றி தவறாக பேச வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். நடிகர் ஜெயம் ரவிக்கு நாளை பிறந்தநாள் தினம் வரும் நிலையில் இன்று அவருடைய மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் நடிகர் ஜெயம் ரவியின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.