
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகை பாயல் ராஜ்புத் நடிகர் பிரபாஸ் குறித்து பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, நான் நடிகர் பிரபாஸ் என்ன கேட்டாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். நான் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளையும் தனித்தனியாக காதலிக்கிறேன். நான் அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய விரும்புகிறேன்.
அவர் என்ன கேட்டாலும் நான் செய்ய வேண்டும். எனக்கு பிடித்த ராஜ்மா சாதத்தை என் கைகளாலே தயாரித்து அவருக்கு ஊட்டி விட வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் விடமாட்டேன். எல்லாமே என் கையால் செய்வேன் என்று கூறியுள்ளரார். இவரின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை பாயல் ராஜ்புத் ஹிந்தியில் வெளியான ஆர்.எக்ஸ் 100 படத்தில் அறிமுகமான நிலையில் தன் முதல் படத்திலேயே கவர்ச்சியில் களமிறங்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.