
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் தி கோட் படத்திற்கு எதிராக தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலரான தேவராஜன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
அதாவது அனுமதி இன்றி தி கோட் படம் 6 காட்சிகள் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டும். அதன் பிறகு படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தன் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விதிமுறைகளை மீறும் தியேட்டர் நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.