
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், ராப் பாடகர், நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டு பிசியானவராக வலம் வருபவர் ஹிப்பாப் ஆதி. இவர் மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி நடித்தார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹிப்ஹாப் ஆதி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது மரகத நாணயம் என்ற திரைப்படத்தை இயக்கிய ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் ஆதிரா ராஜ் ஹீரோயினாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ஹிப்ஹாப் ஆதியின் பிறந்த நாளான இன்று வீரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Here is the Super cool #VeeranFirstLook ft. @hiphoptamizha in a different avatar ⚡🎉 #Veeran In Theatres Summer 2023 🥁@ArkSaravan_Dir @editor_prasanna @deepakdmenon @kaaliactor @SassiSelvaraj @MaheshMathewMMS pic.twitter.com/qbIYC79Wb8
— Sathya Jyothi Films (@SathyaJyothi) February 20, 2023