
உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் காஜல் நிஷாத். இவர் ஒரு பொது நிகழ்ச்சியில் திடீரென்று மயங்கி விழுந்தார் . உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய உடலில் நீரிழிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இந்த நிலையில் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவருக்கு இசிஜி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மாரடைப்பு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. உடனே இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#WATCH | Samajwadi Party candidate from Gorakhpur, Kajal Nishad was admitted to Medanta Hospital in Lucknow late last night after her health deteriorated. She is under treatment.
(Source: Samajwadi Party) pic.twitter.com/YrsncUxPRo
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 8, 2024