
நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் காலமானார். வனிதா விஜயகுமார் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பாலை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களிலேயே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.