
பொதுவாகவே செல்ல பிராணிகள் மனிதர்களின் மீது அதிக பாசம் வைத்திருக்கும். சில நேரங்களில் அதனை மனிதர்கள் மீது வெளிப்படுத்துவதை நாம் கண்கூடாக பார்த்திருப்போம். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு நபர் ஹைவே சாலையில் காரை நிறுத்தி அதன் பின்புற டிக்கியை திறந்து ஒரு பெரிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை கீழே இறங்குகிறார். அந்த நாய் தன்னுடைய வாழை அசைத்துக் கொண்டு தாய் தந்தையை பார்ப்பது போல அவரைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. அதன் பிறகு காரின் பின்புறத்தை மூடி விட்டு அந்த நபர் முன்னோக்கி செல்லும் நிலையில் நாய் கதவு வரை அவரை பின்தொடர்கின்றது.
இருந்தாலும் நாய் வாலை ஆட்டிக்கொண்டேன் நின்று கொண்டு இருக்க அந்த நபர் கார் கதவை மூடிவிட்டு காரை ஓட்டி செல்கிறார். நாய் வாழை ஆட்டிக்கொண்டே காரின் பின்னால் ஓடுகின்றது. தன்னுடைய எஜமான் தன்னை விட்டு விட்டு சென்றது முதலில் அந்த நாய்க்கு தெரியவில்லை. அதன் பிறகு ஒரு கட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த நாய் திடீரென நிற்கிறது. அப்போது தான் நடந்த உண்மை அதற்கு தெரிந்த நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிய பலரையும் கலங்க வைத்துள்ளது.
Man arrested after he was caught on camera abandoning his German Shepherd pic.twitter.com/81sdeV9rEQ
— CCTV IDIOTS (@cctvidiots) August 7, 2023