
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள 3 ஏடிஎம்களில் ரூ.66 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு கண்டெய்னர் லாரிகளில் தமிழகம் வழியாக தப்பி ஓட முயன்றனர். இவர்களை காவல்துறையினர் பின் தொடர்ந்த நிலையில் நாமக்கல் அருகே போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு கொள்ளயன் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து மற்றவர்களை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மொத்தம் 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் அவர்கள் பவாரியா கும்பலாக இருக்க கூடும் என்று நினைத்த நிலையில் அவர்கள் மேவாட் கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. அதாவது ஏடிஎம் மிஷின்களை மட்டும் குறி வைத்து கொள்ளையடிப்பார்கள். இந்நிலையில் சேலம் சரக டி.ஐ.ஜி உமா தற்போது நாமக்கல்லில் கொள்ளையர்கள் பிடிபட்டது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, கொள்ளையர்கள் 7 பேரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் google map உதவியுடன் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஏடிஎம் மிஷின்களை குறி வைத்து கொள்ளையடிப்பார்கள். இவர்கள் கொள்ளையடிப்பதற்கு கார் பயன்படுத்தி நிலையில் திருச்சூரில் காரில் சென்று தான் கொள்ளையடித்துள்ளனர். அதன் பிறகு ஒரு கும்பல் காரிலும் மற்றொரு கும்பல் கண்டெய்னர் லாரியிலும் தப்பி ஓடியுள்ளனர். இவர்கள் ஏடிஎம் மிஷினை வெல்டிங் எந்திரம் மூலம் அறுத்து கொள்ளையடித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.