அமெரிக்காவில் உள்ள பிலடெலிபியாவிலிருந்து சிகாகோ நோக்கி ஒரு விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த சவுத் வெஸ்ட் விமானத்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு பெண் ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்திக்கொண்டார். அந்தப் பெண் நிர்வாணமாக விமானத்தின் இருக்கையில் அமர்ந்தும் மலம் கழித்தார். இதனைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைத்தனர்.

இந்த பெண் திடீரென இப்படி நடந்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இந்த விமானம் தரையிறங்கியதும் உடனடியாக காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்தனர். இந்நிலையில் விமானத்தின் இருக்கையை சுத்தம் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் பல மணி நேரமாக அந்த விமானம் சேவையில் இல்லாமல் இருந்தது. மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பயணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.