
இந்தியாவில் மக்கள் பலரும் அதிக அளவு ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது சில ரயில்வே விதிகளை நாம் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன்படி ரயில் நிலையத்திற்குள் பயணிகள் அல்லாதவர் செல்ல வேண்டும் என்றால் நடைமேடை டிக்கெட் கட்டாயம் எடுக்க வேண்டும்.
அந்த டிக்கெட் 2 மணி நேரம் மட்டுமே செல்லும். அதன் பிறகு அந்த டிக்கெட் இருந்தாலும் 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். நடைமேடை டிக்கெட் இல்லாமல் பிடிபட்டாலும் 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். டிடிஆரிடம் பிடிபட்டால் கடைசியாக புறப்படும், வரும் ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும்.