
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குண்டு ரெட்டியூர் கிராமத்தில் காளிதாஸ் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூரில் கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நெருங்கிய நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (35). இவர் லாரி ஓட்டுனராக இருக்கிறார். இந்நிலையில் காளிதாசன் மனைவிக்கும் சரவணனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட காளிதாஸ் சரவணனை பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்காக காளிதாஸ் ஓசூர் கிளம்பி சென்று விட்டார்.
அந்த சமயத்தில் சரவணன் அவருடைய வீட்டிற்கு சென்று அவர் மனைவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது திடீரென காளிதாஸ் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனால் பயந்து போன சரவணன் வீட்டில் உள்ள பீரோவுக்கு பின்னால் ஒளிந்தார். அப்போது தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் வீடு முழுவதும் காளிதாஸ் தேடிய போது சரவணன் ஒளிந்து இருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்து சரவணன் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் அக்கம்பக்கத்தினரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.