
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த சவுத்ரி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மனைவி ஜெயஸ்ரீ. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
இந்நிலையில் சவுத்ரி தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு கேரள மாநிலம் கொச்சி கடற்படையில் வேலை பார்க்கும் தனது நண்பரான பாஸ்கர் ஜோதி கோகாய் என்பவரிடம் விவரத்தை கூறினார்.
இதனையடுத்து கடந்த 2005-ஆம் ஆண்டு சவுத்ரி தனது நண்பருடன் சேர்ந்து ஜெயஸ்ரீயை உயிரோடு எரித்து கொலை செய்துவிட்டு, ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார்.
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மை தெரிய வந்ததால் போலீசார் சவுத்திரியை கைது செய்தனர். அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் பாஸ்கர் ஜோதி தலைமறைவாக இருந்தார்.
அவரை இத்தனை ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். தற்போது கிடைத்த தகவல் படி பாஸ்கர் ஜோதி அசாம் மாநிலத்தில் டியூஷன் ஆசிரியராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது.
ஆனால் அவரது 21 வயது புகைப்படத்தை வைத்து எப்படி தேடுவது என போலீசார் நினைத்தனர். அதன் பிறகு AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் புகைப்படம் வரைந்து, பாஸ்கர் ஜோதியை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். சுமார் 31 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியுடன் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.