
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தோட்டக்காடு பகுதியி வசிப்பவர் விஷ்ணு 24 வயதான இவர் பிரபல ரவுடி. இவர் மீஞ்சூர் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் கூறப்படுகிறது .இவருடைய நண்பரும் கூட்டாளிமான லட்சுமணன் என்பவரும் பிரபல ரவுடி. இந்த நிலையில் விஷ்ணு கூட்டாளியை சந்திப்பதற்காக வரும்பொழுது லட்சுமணனின் மனைவியோடு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரம் லட்சுமணனுக்கு தெரிய வந்ததால் அவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமணனும், விஷ்ணுவும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மனைவியுடன் கள்ளக்காதல் குறித்து விஷ்ணு விடம் லட்சுமணன் தட்டி கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த விஷ்ணு மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் லட்சுமணனை சரமாரியாக வெட்டி தப்பிஓடி உள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் தோட்டக்காடு பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.