சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஜான் தேவராஜ் என்ற 33 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பூங்காவில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஜான் தேவராஜ் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு கடன் வாங்கி கொடுப்பதற்காக கடந்த மாதம் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். ஆனால் அவர் திடீரென இறந்து விட்டதால் அந்த கடனை ஜான் தேவராஜ் அடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அவர் தன்னுடைய சம்பளத்திலிருந்து சிறிது சிறிதாக அந்த கடனை அடைத்த நிலையில் செலவுக்காக தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடன் நெருக்கடியில் சிக்கிய நிலையில் அவரிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்தார்கள்.

எனவே ஜான் தேவராஜ் தற்கொலை செய்ய முடிவு செய்த நிலையில், வீட்டிலிருந்து வெளியே சென்ற தன் மனைவிக்கு செல்போனில் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது கடன் தொகை அதிகமானதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் கூறிக்கொண்டே தூக்கில் தொங்கினார்.

இதை பார்த்து கதறி துடித்த அவருடைய மனைவி வீட்டிற்குள் வருவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.