சேலம் மாவட்டம் ஆத்தூரில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான குமரேசன்(35)  என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த பள்ளி ஆசிரியை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது சிறுமியின் தந்தைக்கு நெருங்கிய நண்பர் தான் குமரேசன்.

இந்த நிலையில் சிறுமியின் வீட்டிற்கு சென்று வந்த போது குமரேசனுக்கும், சிறுமியின் தாய் சசிகலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சசிகலா குமரேசனுடன் உல்லாசமாக இரு என கூறி தனது மகளை கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்தார். இதனால் குமரேசன் வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என குமரேசன் மிரட்டியுள்ளார். இதனால் குமரேசன், சிறுமியின் தாய் சசிகலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.