பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் தீபிகா படுகோனே காவிநிற உலகில் கவர்ச்சியாக நடனம் ஆடியதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இன்று பதான் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் பதான் படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலரில் ஹாலிவுட் படங்களில் வருவது போன்று மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருகான் தளபதி விஜயை மீண்டும் புகழ்ந்து தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மிக்க நன்றி நண்பா. இதனால்தான் நீங்க தளபதி. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கான் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் நிலையில், நடிகர் ஷாருக்கான் ஏற்கனவே பலமுறை நடிகர் விஜயை புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.